சல்மான் ருஷ்டி மீதான தாக்குதல் நியாயமற்றது - இம்ரான்கான் கண்டனம்
பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி (வயது 75), மீது கடந்த வாரம் அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. நியூயார்க் நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சல்மான் ருஷ்டி விரிவுரை ஆற்ற இருந்த சமயத்தில் மேடையில் திடீரென ஏறிய நபர் சல்மானை கத்தியால் குத்தினார். இந்த தாக்குதலில் சல்மானின் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த சல்மான் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து தீவிர சிகிச்சைக்கு பிறகு அவர் உயிர் பிழைத்தார்.
இந்நிலையில், எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீதான தாக்குதலுக்கு பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய இம்ரான்கான், இச்சம்பவம் பயங்கரமானது, துயரமானது. சல்மான் ருஷ்டி மீதான கோபம் புரிந்துகொள்ளக் கூடியது. ஆனாலும் இந்த தாக்குதல் நியாயமற்றது என குறிப்பிட்டுள்ளார்.