Category:
Created:
Updated:
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை கைது செய்யுமாறு ஏற்கனவே நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று கொழும்புல் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்பு பேரணியில் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து வசந்த முதலிகே உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.