Category:
Created:
Updated:
டெல்லியில், ஆகஸ்ட் 1ம் தேதி 3.23 சதவீதமாக இருந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகள் விகிதம், ஆகஸ்ட் 17ல் 6.23 சதவீதமாக இரு மடங்காக அதிகரித்துள்ளது. டெல்லியில் கொரோனா தொற்று பரவல் விகிதம் அதிகபட்சமாக 19.20 சதவீதமாக உள்ளது. ஆகஸ்ட் 17 ஆம் தேதி நிலவரப்படி அங்கு சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 6,809 ஆக உயர்ந்துள்ளது.
டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.