Category:
Created:
Updated:
தமிழ் இலக்கிய பேச்சாளரும், பட்டிமன்ற நடுவரும், 'தமிழ்க்கடல்' நெல்லை கண்ணன் திருநெல்வேலியில் உள்ள இல்லத்தில், வயது முதிர்வு காரணமாக காலமானார். அவருக்கு வயது 78. ந.சு. சுப்பையா பிள்ளை, இலக்குமி அம்மையார் ஆகியோரின் 4வது மகனாக கடந்த 1946 ஆம் ஆண்டு விவசாய குடும்பத்தில் பிறந்தவர் நெல்லை கண்ணன். விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் தமிழ் மீது தனியாத ஆர்வம் கொண்டவராக இருந்து வந்த அவர், பாரதி பாடல்கள், தமிழ் இலக்கிய நூல்கள் என அனைத்தையும் கற்றுத் தேர்ந்தவர். பேச்சாற்றல் மிக்கவர் என்பதால் ஏராளமான பட்டிமன்றங்களில் கலந்து கொண்டவர். அரசு தொலைக்காட்சியில் பட்டிமன்ற நடுவராகப் பலமுறை செயல்பட்டுள்ளார்.
அவரது இறுதிச்சடங்கு நாளை பிற்பகல் 1 மணிக்கு நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.