Category:
Created:
Updated:
காலிமுகத்திடல் செயற்பாட்டாளர்கள் தங்கியிருந்த இடத்திற்கு ஏற்பட்ட சேதத்துக்கான கட்டணம் அந்தச் செயற்பாட்டாளர்களிடமிருந்து மீட்கப்படும் என நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிடுகின்றார். குறித்த பகுதிக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு அதன் ஊடாக அவர்களிடமிருந்து மீளப் பெற்றுக் கொள்ளப்படும் என்றார்.
பிரதேசத்தில் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் முழுமையான மதிப்பீட்டு அறிக்கையை சமர்ப்பித்து, எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்குமாறு அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவித்ததாகவும் அமைச்சர் கூறினார்.