10 மணி நேர மின் துண்டிப்புக்கு முகம்கொடுக்க நேரிடும் - சம்பிக்க எச்சரிக்கை
செப்டம்பர் மாதம் இறுதியில் இருந்து இரண்டரை மில்லியன் தொன் நிலக்கரி கொண்டுவர முறையாக நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் 10 மணி நேர மின் துண்டிப்புக்கு முகம்கொடுக்கவேண்டிய நிலை ஏற்படும் என பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
பொரலஸ்கமுவ 43 ஆவது படையணி காரியாலலயத்தல் புதக்கிழமை (17) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
முறையான திட்டத்தின் கீழ், நாட்டின் பொருளாதாரம் மற்றும் வெளிநாட்டு செலாவணிக்கு தாங்கிக்கொள்ள முடியுமான வகையில் நிலக்கரி கொண்டுவரும் நடவடிக்கையை மேற்கொள்ள தவறியதால், தற்போது பாரிய பிரச்சினைக்கு ஆளாகி இருக்கின்றது.
இந்த நடவடிக்கையை தொடர்ந்தும் இவ்வாறே முறைகேடான வகையில் முன்னெடுத்தால், எதிர்காலத்தில் மிகவும் பாரதூரமான விடயங்களுக்கு முகம்கொடுக்கவேண்டி ஏற்படும்.
ஏனெனில் நிலக்கரி மின் உற்பத்தி இல்லாமல்போனால் 10 மணி நேர மின் துண்டிப்புக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும் என்றார்.