வாக்கிங் ஸ்டிக்கால் நிருபரை தாக்க முயற்சித்த கமல்ஹாசன்
வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் கோவை ஜி.சி.டி கல்லூரிக்கு இன்று காலை கமல்ஹாசன் சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்கள் கமல் வருகையை படம் பிடித்துக் கொண்டிருந்துள்ளனர்.
அங்கிருந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மோகன் என்பவர் கமல் வருவதை வீடியோ எடுத்துக் கொண்டே சென்றுள்ளார்.
பவுண்சர்களுக்கு நடுவே நடக்க பழகிக்கொண்ட கமல்ஹாசனுக்கு, மக்கள் அருகில் வருவது ஏதோ பிரச்சனையை கிளப்பியுள்ளது. சட்டென கோபமடைந்த அவர், தனது ‘வாக்கிங் ஸ்டிக்கை’ அந்த நிருபர் கழுத்தில் வைத்து தள்ளி தாக்க முற்பட்டிருக்கிறார்.
நிருபரோ அல்லது பொதுமக்களோ, தன்னை தேடி வரும் மனிதனுக்கு ஒரு கட்சி தலைவர் கொடுக்கும் மரியாதை இதுதானா.?
‘என்ன நடந்தாலும் கூட்டத்தை பக்கத்தில விடக்கூடாது’ என்று ஒரு வசனம் வரும், இந்த வசனம் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ கமலுக்கு கட்சிதமாக பொருந்துகிறது. சாமானியர்களே அருகில் வேண்டாம் என்று நினைக்கும் இவர் போன்ற ‘ஆண்டவர்கள்’ எதற்கு களத்திற்கு வருகிறார்கள் என்பதே வெகுஜனத்தின் கேள்வி..? இது தான் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவருக்கு தெரிந்த நாகரீகமா? என பொதுமக்கள் பேசி வருகின்றனர்.