யாழில் அதிகரித்துள்ள கொரோனா தொற்று! தொடர்ந்தும் முடக்குவதா? ஆ.கேதீஸ்வரன் வெளியிட்ட தகவல்
யாழ்ப்பாணத்தில் மேலும் 54 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை யாழ்.நகர் நவீன சந்தைத் தொகுதி (நியூமாக்கெற்) வர்த்தகர்களிடம் இருந்து பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையிலேயே குறித்த முடிவுகள் வெளியாகியுள்ளன.
யாழ்.மாநகரில் முடக்கப்பட்ட பகுதியை சேர்ந்த 464 பேருக்கு முல்லேரியாவில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் குறித்த முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, செவ்வாய்க்கிழமை பெற்ற மாதிரிகளின் முடிவுகள் இன்று மாலை வெளியாகும். அதன் பின்னரேயே யாழ்.நகர் வர்த்தக நிலையங்களைத் திறப்பதா? மூடுவதா என்று தீர்மானிக்கப்படும் என்றும் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் யாழ்.பல்கலைப் மருத்துவபீடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவுகளின் அடிப்படையில் நேற்றைய தினம் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.