தமிழக சட்டசபை தேர்தலில் வாக்குப்பதிவு செய்ய செல்லாத பிரபலங்கள்?
தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது.
பல கோடி வாக்காளர்கள் இந்த சட்டசபைத் தேர்தலில் வாக்களித்துள்ளனர். நடிகர்கள் ரஜினி, கமல், அஜீத், விஜய், விக்ரம் உள்ளிட்ட பிரபலங்கள் காலையிலே குடும்பத்தோடு வந்து வாக்களித்து ஜனநாயகக் கடமையாற்றினர். இந்த தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்த், இசையமைப்பாளர்கள் இளையராஜா, ஏ.ஆர் ரகுமான் உள்ளிட்ட ஏராளமானோர் வாக்களிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
மிழகத்திலுள்ள அரசியல் பிரபலங்கள், திரை பிரபலங்கள், மூத்த குடிமக்கள் என அனைவரும் உற்சாகமாக வாக்களித்தனர். வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டதால் இன்று சசிகலா வாக்களிக்கவில்லை. ஒவ்வொரு தேர்தலின் போதும் ஜெயலலிதா உடன் காரில் சென்று வாக்களிப்பார் சசிகலா. இந்த முறை வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டதால் அவரால் வாக்களிக்க முடியாமல் போய் விட்டது.
தேமுதிக தலைவர் விஜயகாந்தும் இன்று வாக்களிக்கவில்லை. உடல்நலமில்லாத நிலையிலும் ஊர் ஊராக சென்று தேமுதிக வேட்பாளர்கள், கூட்டணி கட்சியினருக்காக வாக்கு சேகரித்தார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் விஜயகாந்த் வாக்களிக்க வரவில்லை.
விஜயகாந்த், சசிகலா தவிர ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா, யுவன், மணிரத்னம், வெற்றிமாறன்,கவுண்டமணி,வடிவேலு, கே.பாக்யராஜ், மோகன், கார்த்திக், பார்த்திபன், ராஜ்கிரண், அரவிந்த் சுவாமி, பிரபுதேவா, லாரன்ஸ், விஷால் ஆகியோர் வாக்களிக்கவில்லை என தெரியவந்துள்ளது.
இயக்குநர் சுந்தர்.சி, சிவா, சமுத்திரக்கனி, ஜி.வி.பிரகாஷ், கவுதம் மேனன்,லிங்குசாமி, கோவை சரளா, மீனா, விக்னேஷ் சிவன், தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், செளந்தர்யா ரஜினிகாந்த் ஆகியோரும் வாக்களிக்கவில்லை. தி க்ரே மேன் ஹாலிவுட் படத்துக்காக அமெரிக்காவில் இருப்பதால் நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா வாக்களிக்க வரவில்லை என தெரியவந்துள்ளது.