Category:
Created:
Updated:
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு இணங்க, கடினமான காலங்களில் இலங்கைக்கு ஆதரவளிப்பதற்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் அறிக்கை ஒன்றில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்ட்டுள்ளது. அதிகாரிகள் தமது பொருளாதார சீர்திருத்த வேலைத் திட்ட தயாரிப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதுடன், சர்வதேச நாணய நிதியம் அவர்களுடன் தொடர்ந்தும் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.
நெருக்கடி நிலை காரணமாக இலங்கை மக்கள் எதிர்நோக்கும் இன்னல்களையும் சிரமங்களையும் தமது அணியினரால் பார்க்க முடிந்ததாகவும் அவர்கள் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.