தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்?
தமிழ்நாட்டின் சட்டசபைத் தேர்தல் நாளை இடம்பெறவுள்ளது. முன்னெப்போதுமில்லாது இந்தமுறைத் தேர்தல் தமிழகத்தில் மட்டுமல்லாது இந்திய அளவுலும் உலகளவிலும்கூர்ந்து கவனிக்கப்பட்டு வருக்கின்றது.
இந்தத் தேர்தலை அறிக்கையிட உலகத்தின் முன்னணி தொலைக்காட்சிகளான பி.பி.சி, சி.என்.என், அல் ஜசீரா உள்ளிட்ட பிரபல்யமான தொலைக்காட்சிகள் தமிழகத்துக்கு படையெடுத்துள்ளனர்.
இம்முறை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் மிகவும் உக்கிரமான தேர்தல் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டிருந்தார். அதேபோல் நாம் தமிழர் கட்சியின் சீமானும் சூறாவளிப் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தார்.
தேவேளை கலைஞர் இல்லாத திமுக இம்முறை சற்று ஆட்டம் கண்டுள்ளதாக தமிழகச் செய்திகள் கிடைக்கின்றன. அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக அவருடைய மகன் உதயநிதி ஸ்டாலின் மிகவும் கடினமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்ததை காணமுடிந்தது.
மறுபுறத்தில் அதிமுக தானுண்டு தன்பாடுண்டு என்ற ரீதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டமையை காணமுடிந்தது. தற்போதைய முதல்வர் எடப்பாடி ஒருபுறத்திலும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்னொரு புறத்திலும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
இம்முறை முதல்வராகும் வாய்ப்பு திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் சமமாகவே காணப்படுவதாகவும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கும் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்துக்கும் குறிப்பிட்டளவு ஆசனங்கள் கிடைக்க சந்தர்ப்பங்கள் அதிகம் காணப்படுவதாக இறுதிநேர கருத்துக் கணிப்புக்கள் தெரிவிக்கின்றன.
நாளை தமிழக மக்கள் தமக்கான அடுத்த முதல்வரை தேர்ந்தெடுப்பார்கள்.