Category:
Created:
Updated:
மத்திய வங்கியின் ஆளுநரின் பதவிக் காலத்தை நீடிப்பதற்கான பரிந்துரையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநரின் பதவிக்காலம் நாளையுடன் (30) நிறைவடையவுள்ளது. மத்திய வங்கியின் ஆளுநராக 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கடமைகளை பொறுப்பேற்ற கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமியின் பதவிக்காலமே இவ்வாறு நாளையுடன் நிறைவடைகிறது.
இக்காலப்பகுதியில் மத்திய வங்கியின் ஆளுனர்களாக நான்கு பேர் (கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன், அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் கலாநிதி நந்தலால் வீரசிங்க) கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.