Category:
Created:
Updated:
எரிபொருள் விநியோகத்திற்காக உரிய நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய பணத்தை திட்டத்துடன் செலுத்துவதற்கு மத்திய வங்கி ஆளுநர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு நீண்டகாலமாக எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகித்து வரும் பிரதான நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இன்று (27) காலை கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
அதுவரை தற்போதுள்ள நிதியை பயன்படுத்தி எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.