Category:
Created:
Updated:
தென்ஆப்பிரிக்காவின் தெற்கு நகரான கிழக்கு லண்டனில் உள்ள நகர் ஒன்றில் நைட் கிளப் ஒன்று உள்ளது. இதில், நிறைய பேர் கூடியிருந்து உள்ளனர். இந்நிலையில், கிளப்பில் 17 பேர் உயிரிழந்த நிலையில் கிடந்து உள்ளனர். அவர்களது மர்ம மரணம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிளப்பில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டு கொண்டார்களா? அல்லது வேறு ஏதேனும் விவகாரம் நடந்து உள்ளதா? என்பது பற்றிய விவரங்கள் எதுவும் வெளிவரவில்லை. இதுபற்றி மாகாண காவல் துறையின் தலைமை பிரிகேடியர் தெம்பின்கோசி கினானா கூறும்போது, நடந்த சம்பவத்தின் சூழலுக்கான பின்னணி பற்றி நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம் என கூறியுள்ளார்.