
தங்கள் சொந்த டொலர் கையிருப்பை அதிகரிக்க முயற்சி
இத்தருணத்தில் எமது நாட்டை ஒரு மோசமான நிலைக்கு மொட்டு அரசாங்கம் தள்ளியுள்ளது எனவும், தூர நோக்கற்ற மற்றும் விஞ்ஞானபூர்வமற்ற கதைகளின் அடிப்படையில் அமைந்த ஒரு பயணத்தால் முழு நாடும் அகதிமுகாமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஜனநாயக, சுதந்திரமான மற்றும் வெளிப்படையான மக்கள் போராட்டம் மூலமே இச்சூழ்நிலையிலிருந்து வெளியேற உள்ள ஒரே வழி எனவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (25) தெரிவித்தார்.
தற்போதைய ஆட்சியாளர்கள் நாட்டின் உண்மை நிலையை புரிந்து கொண்டு மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் தமது வேலைத்திட்டத்தை மாற்றிக்கொள்வார்கள் என நம்பினாலும், அவ்வாறான மாற்றமொன்று இடம் பெறவில்லை எனவும், மக்களுக்கு என்ன நடந்தாலும் பாமரத்தனமான அரசியலில் ஈடுபட்ட வன்னம் அடுத்த இரண்டு வருடங்களுக்கும் ஆட்சியின் சுகத்தை அனுபவிக்க மிகவும் பொருத்தமான வாயிற்காவலர் நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்தார்.