அரிசியை அதிகரித்த விலைக்கு விற்றமை மற்றும் பதுக்கி வைத்தல் உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்பில் 665 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. மேற்படி அதிகாரசபை நாடளாவிய ரீதியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றிவளைப்புகளை மேற்கொண்டுள்ள நிலையில் முறைகேடாக செயற்பட்டுள்ள 665 பேர் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதிகரித்த விலையில் அரிசியை விற்பனை செய்த 186 பேரையும் விலைகளைக் காட்சிப்படுத்தாமை உள்ளிட்ட குற்றங்களுக்காக 479 பேரையும் கைது செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள 22 வழக்குகளில் குற்றவாளிகளிடம் இருந்து 32 இலட்சம் ரூபா தண்டப்பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.