Ads
பிக்பாஸ் பிரபலம் அனிதாவின் தந்தை மரணம்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல செய்தி வாசிப்பாளர் அனிதாவின் தந்தை மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
எழுத்தாளரும், பத்திரிகையாளமான ஆர்.சி.சம்பத் தனது மகனுடன் சீரடி சென்றுள்ளார். அங்கு தரிசனம் முடிந்து சென்னைக்கு ரயிலில் வரும் வழியில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அவரது உடல் பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து ஆம்புலன்சில் சென்னை எடுத்து வரப்படுகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய அனிதா இன்னும் தன்னுடைய தந்தையை பார்க்கவில்லை. அதற்குள் இப்படி ஒரு சம்பவம் அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சம்பத்தின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Attachments
Info
Ads
Latest News
Ads