Ads
மதுபோதையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்திய 398 பேருக்கு வழக்கு
மோட்டார் சைக்கிள்களின் ஊடாக இடம்பெறுகின்ற விபத்தை குறைப்பதற்காக கடந்த 72 மணிநேரத்தில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத 450 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இதேவேளை, “கடந்த 24 மணிநேரத்தில் மட்டும், போக்குவரத்துசட்ட திட்டங்களை மீறினர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் 13,320 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அத்தோடு கொழும்பிலிருந்து புறப்படுகின்ற நெடுந்துார போக்குவரத்து சேவைகளில் பேருந்து சாரதிகள் வாகனம் செலுத்தும் முறை தொடர்பில் கண்காணிப்பதற்காக இன்று (5) முதல் சிவில் உடையில் காவல்துறை உத்தியோகத்தர்களை கடமையிலீடுபடுத்த தீர்மானிப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
Info
Ads
Latest News
Ads