பூத் ஸ்லிப் இல்லை என்றால் வாக்களிக்க முடியுமா?
தமிழ்நாட்டில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதை அடுத்து தேர்தலில் வாக்களிக்கச் செல்லும் வாக்காளர்கள் பூத் சிலிப், வாக்காளர் அட்டை ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது
வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் அதற்கு பதிலாக ஆதார் அட்டை, ரேஷன் கார்டு உள்பட 11 ஆவணங்களைக் கொண்டு செல்லலாம் என தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது அரசியல் கட்சியினர் கொடுக்கும் பூத் ஸ்லிப் இல்லாமல் வாக்களிக்கலாமா? என்ற சந்தேகம் ஒருசில வாக்காளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இது குறித்து விளக்கமளித்த தலைமை தேர்தல் அதிகாரி, ‘பூத் ஸ்லிப் இல்லை என்றாலும் வாக்களிக்கலாம் என்றும் வாக்காளர் அடையாள அட்டையுடன் உள்பட ஏதாவது ஒரு ஆவணத்துடன் வரும் வாக்காளரின் பெயர் பட்டியலில் இருந்தால் அவர் வாக்களிக்கலாம் என்றும் பூத் ஸ்லிப் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து பூத் சிலிப் இல்லாமலும் வாக்கு அளிக்கலாம் என்பது உறுதியாகியுள்ளது.