கோடைக்கால பயிற்சி வகுப்பு என்ற பெயரில் குழந்தைகளுக்கு சாக்லெட், குளிர்பானம் கொடுத்து மயக்கி மதமாற்றம்
குடும்ப ஏழ்மை நிலையை அறிந்து கோடைக்கால பயிற்சி வகுப்பு என்ற பெயரில் இந்து குழந்தைகளுக்கு குளிர்பானங்கள் சாக்லேட் மற்றும் பிஸ்கட் கொடுத்து கட்டாய மதமாற்றம் முயற்சியில் ஈடுபட்ட கிருத்துவ தேவாலயத்தின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை நகரில் காந்தி நகர் பகுதியில் அமைந்துள்ளது அசெம்பிளி ஆப் காட் சர்ச். இந்த தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் கிறிஸ்தவர்கள் அனைவரும் ஒன்றுகூடி இயேசுவின் நாமங்களை பாடியும் ஜெபித்தும் வழிபடுவர்.
இந்நிலையில் கோடைக்கால பயிற்சி வகுப்பு என்ற பெயரில், திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் குடும்ப ஏழ்மை நிலையை அறிந்து ஏழை எளிய மாணவ-மாணவிகளை ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் தேவாலய நிர்வாகம் அழைத்து வந்து ஜூஸ்,சாக்லேட் மற்றும் பிஸ்கட்டுகள் கொடுத்து கிறித்தவ போதனைகளையும் பாடல்களையும் பாட வைப்பதுடன் பைபிள் வசனங்கள் உள்ளிட்டவைகளை தேவாலய ஊழியர்கள் கற்றுத்தந்து இந்து மாணவர்களை கட்டாய மதமாற்ற முயற்சியில் ஈடுபடுத்தி உள்ளனர்.