Category:
Created:
Updated:
நாடு முழுவதும் டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விநியோகம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தியை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நிராகரித்துள்ளார்.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் தற்போது இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார். இதேவேளை, மின்வெட்டு இன்றி மின்சாரத்தை தொடர்ந்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சித்து வருவதாகவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இதன்போது குறிப்பிட்டார்.