Category:
Created:
Updated:
ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தின் அடிப்படையில் கொள்கை முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடு எதிர்நோக்கும் தற்போதைய பொருளாதார நெருக்கடியை ஏற்றுமதியை ஊக்குவிப்பதன் மூலமே சமாளிக்க முடியும் என பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று (26) காலை வங்கிகளின் தலைவர்களை சந்தித்த போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். எதிர்காலத்தில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும், அதற்கு நாம் தயாராக வேண்டும் எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதைய உலகளாவிய நெருக்கடியில் சுமார் 70 நாடுகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும், அதில் இலங்கை முன்னணியில் இருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
மேலும் சர்வதேச வட்டி விகிதங்கள் உயரும் அபாயம் உள்ளது என்றும் அவர் கூறினார்.