இலங்கையில் 18 மாவட்டங்களில் 549 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
நாட்டில் நேற்றைய தினம் மொத்தமாக 549 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறு புதிதாக அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 530 பேர் பேலியகொட – மினுவாங்கொடை கொத்தணிப் பரவலுடன் தொடர்புடையவர்கள் ஆவர். ஏனைய 19 பேர் ஜோர்தானிலிருந்து நாட்டுக்கு வருகை தந்தவர்கள் என்பதுடன் அவர்களில் ஒரு கடற்படை ஊழியரும் அடங்குவர்.
இதனால், இலங்கையில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 41,603 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.இதேவேளை பேலியகொட – மினுவாங்கொடை கொரோனா கொத்தணிப் பரவலில் சிக்கிய மொத்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கை 37,890 ஆக பதிவாகியுள்ளது. இது இவ்வாறிருக்க, நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான 520 நோயாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர். அதன் காரணமா குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் 33,221 ஆக உயர்வடைந்துள்ளது. தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலை மற்றும் சிகிச்சை நிலையங்களில் 8,188 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேநேரம் கொரோனா தொற்று சந்தேகத்தின் பேரில் 614 பேர் தொடர்ந்தும் வைத்தியக் கண்காணிப்பில் உள்ளனர்.