Category:
Created:
Updated:
வங்கி முறைக்கு வெளியே அந்நியச் செலாவணி பரிமாற்றத்தை கட்டுப்படுத்த எதிர்காலத்தில் சில நடவடிக்கைகளை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
“வங்கி அமைப்புக்கு வெளியே, உண்டியல் மற்றும் ஹவாலா மூலம் அந்நியச் செலாவணி பரிமாற்றம் செய்யப்படுகிறது. அது குறித்து சில முடிவுகளை எடுக்க வேண்டும்.”
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், வங்கி முறைக்கு வெளியே பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மேற்கூறிய முறைகள் மூலம் அந்நிய செலாவணி கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதனைக் கட்டுப்படுத்துவதற்கான சுற்றறிக்கையை விரைவில் வெளியிடவுள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.