சினிமா செய்திகள்
வாய்ப்புக்களை குவிக்கும் பூர்ணிமா ரவி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 7 சீசனில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு பூர்ணிமாவிற்கு கிடைத்தது. பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் முன்பே
கர்ப்பமாக இருக்கும் அமலா பால் - நீச்சல் குளம் அருகே நடத்திய போட்டோ ஷூட்
தமிழ் சினிமாவில், மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய 'சிந்து சமவெளி' படத்தின் மூலம் அறிமுகமாகி, 'மைனா' படத்தின் மூலம் பல இளம் ரசிகர்களின் மனதை கட்டி போட
சுந்தரி சீரியல் நடிகர் அரவிஷுக்கு திருமணம்
சுந்தரி சீரியலில் கிருஷ்ணா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் அரவிஷ் மற்றும் நடிகை ஹரிகா இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் திருமண நிச்சயத
எம்.ஜி.ஆரை விட சிவாஜிக்கு கஷ்டம்: டி.எம்.எஸ்
தான் பாடுவது போல் தெரியாமல் திரையில் தெரியும் அந்த நடிகர் பாடிக்கொண்டு நடிப்பது போல அவர்கள் குரலிலேயே பாடி அசத்தும் திறன் படைத்தவர் டி.எம்.சௌந்திரராஜன
விஜய் டிவியின் காமெடி தொடரான லொள்ளு சபா மூலம் புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் சேசு, இன்று தனது 60வது வயதில் காலமானார்.மாரடைப்பால் கடந்த 10 நாட்களாக சென்ன
கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் வந்த மோதல்
நீயா நானா பாத்திடலாம்!. கவுண்டமணிக்கும் செந்திலுக்கும் வந்த மோதல்!.. கடைசியில என்ன நடந்தது!..கவுண்டமணி நாடகங்களில் முக்கிய வேடங்களில் நடிக்கும்போது நா
டி. எம். சௌந்தரராஜன் வாழ்க்கையில் நடந்த சம்பவம்
"அதிர்ஷ்டம் என்பது எப்போதோ ஒருமுறைதான் கதவைத் தட்டும்."‘தூக்குத்தூக்கி’.சிவாஜி நடிப்பில் இந்தப் படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம். படத்தில் மொத்தம் எட்
Zoom செய்து பார்த்த ரசிகர்கள் - சிக்கிய ஸ்ரீலீலா
சில வீடியோக்களை பார்த்து நடிகைகளை கலாய்த்தும் பங்கம் செய்தும் காமெடி வீடியோக்கள் இணையத்தில் வெளி வந்து வைரலாகி வருதை பார்த்திருப்பீர்கள். அந்த வகையில்
ஜாக்கெட் அணியாமல் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டார் பிரியாமணி
பிரியாமணி கடந்து 2010 ஆம் ஆண்டில் முஸ்தபா ராஜ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.திருமணத்திற்கு பிறகு சில வருடம் திரைப்படங்க
மதுரையில் நடந்து முடிந்தது ரோபோ சங்கர் மகளின் திருமணம்
நடிகர் ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவின் திருமணம் மதுரையில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. குடும்பத்தினரால் நிச்சயிக்கப் பட்டு கோலாகலமாக நடந்து முடிந்த
வேறொரு பெண்ணுடன் 4 வருஷமாக தொடர்பில் இருக்கும் கணவன் குறித்து வருந்திய நடிகை
துக்ளக் தர்பார், வாரிசு போன்ற படங்களில் நடித்துள்ள சமயுக்தா பிக் பாஸ் மூலம் பிரபலமானார். இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், கணவர் கார்த்திக் துபாயில் வேல
தன் குழந்தை முன்னிலையில் காதலனுடன் நிச்சயதார்த்த மோதிரம் மாற்றிக்கொண்ட நடிகை
நடிகை எமி ஜாக்சனுக்கு லண்டனில், கடந்த சில நாட்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் பரவி வரு
Ads
 ·   ·  7392 news
  •  ·  5 friends
  • I

    9 followers

மனோ – பிரதமருக்கு இடையே தொலைபேசி உரையாடல்

மனோ கணேசன் எம்பி ஊடகங்களுக்கு கூறியுள்ளதாவது,

நேற்றிரவு தொலைபேசியில். சபாநாயகர் மஹிந்த யாபாவிடம் பேசி விட்டு, பிரதமர் மஹிந்த ராஜபக்சவை தொடர்பு கொண்டு, “20ம் திருத்தத்தை அகற்றிவிட்டு, 19ம் திருத்தத்தை கொண்டு வருவதாக சொன்னீர்கள். அமைச்சரவையிலும் அனுமதி பெற்றதாகவும் சொன்னீர்கள். ஐக்கிய மக்கள் கூட்டணி சார்பிலும் நாம் அரசியலமைப்பு திருத்த வரைபை வழங்கியுள்ளோம். அதில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமை முழுமையாக அகற்றுவது பற்றி கூறப்பட்டுள்ளது. எனினும் அரசாங்கத்தின் வரைபுக்கே முதலிடம் கிடைக்கும். 20ம் திருத்தத்தை அகற்றும் எல்லா முயற்சிகளுக்கும் நாம் ஆதரவளிப்போம். முதற்கட்டமாக, 20ஐ அகற்றிவிட்டு, 19ஐ கொண்டு வருவதையும் நாம் ஆதரிப்போம். ஆகவே நீங்கள் எப்போது உங்கள் சட்ட வரைபை பாராளுமன்றத்துக்கு கொண்டு வருகிறீர்கள்? இது பற்றி சற்றுமுன் சபாநாயகர் மகிந்த யாபாவிடம் பேசினேன். உங்கள் சட்ட வரைபு எப்போது சபைக்கு வரும் என்பது பற்றி, அவர் தனக்கு எதுவுமே தெரியாது என்கிறார்”, என்று கேட்டேன்.

அதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச, “இன்று நாட்டில் நிலவுவது பொருளாதார பிரச்சினைதான். எமக்கு நட்பு நாடுகள் உதவும். பிரச்சினைகளுக்கு நாம் பொருளாதார தீர்வு வழங்குவோம். அரசியலமைப்பு தீர்வு என்பது பெரிய விஷயமல்ல. அதனால் பொருளாதார பிரச்சினைகள் தீரப்போவதில்லை. 20ம் திருத்தத்தை அகற்றி விட்டு 19ம் திருத்தத்தை மீண்டும் கொண்டு வருவதாக நான் சொன்னதும், அதற்கு அமைச்சரவையில் சம்மதம் பெற்றதும் உண்மைதான். ஆனால், அதற்கு மேல் அதற்கு என்ன நடந்தது என எனக்கு தெரியாது. ஒருவேளை அது அமைச்சரவை உபகுழுவில் இருக்கலாம். அதுபற்றி அவசரப்பட தேவையில்லை. அது சாவகாசமாக வரும்போது வரட்டும். முதலில் மக்களின் பொருளாதார பிரச்சினைகளை நான் தீர்க்கிறேன்.” என்று கூறினார்.

“இல்லை, கவலை வேண்டாம் தம்பி..! மக்களின் பொருளாதார பிரச்சினைகள் தீர்ந்து விட்டால், இந்த ஆர்ப்பாட்டங்கள் எல்லாம் ஓய்ந்து போய் விடும். அதற்குதான் பொருளாதார பிரச்சினைகளை தீர்க்க போகிறேன். அப்புறம் பாருங்கள், இந்த போராட்டங்கள் எல்லாமே முடிவுக்கு வந்து விடும்.” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச கூறி முடித்தார்.

20ம் திருத்தத்தை அகற்றி விட்டு 19ம் திருத்தத்தை மீண்டும் கொண்டு வருவதாகவும், அதற்கு அமைச்சரவையில் சம்மதம் பெற்றதாகவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ச சொல்லி இருந்தாலும், இதற்கு அவர் முன்னுரிமை அளிக்கவில்லை என இப்போது தெரிகிறது. நாட்டில் மக்கள் போராடுவது, உணவு, மருந்து, மின்சாரம், பெட்ரோல், எரிவாயு, உரம் போன்ற பொருளாதார தேவைகளுக்காத்தான் என அவர் உறுதியாக நம்புகிறார். ஆகவே அவற்றுக்கு தீர்வு கண்டால் இந்த போராட்டங்கள் எல்லாம் முடிவுக்கு வந்து விடும் என அவர் நம்புகிறார். இதற்காக அவருக்கு நட்பு நாடுகள் உதவும் எனவும் அவர் நம்புகிறார்.

ராஜபக்ச குடும்பத்தார் மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல், வீணடிப்பு, தவறான நிதிக்கொள்கை போன்ற விடயங்கள் பற்றி அவர் எதுவும் கூறாவிட்டாலும்கூட, இவைபற்றிய போராட்டங்களையும் கூட அவர் முக்கியமாக கருதவில்லை என தெரிகிறது.

இதுபற்றி நேற்றிரவு ஐக்கிய மக்கள் கூட்டணி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் பேசினேன். இன்று ஏனைய எதிரணி கட்சி தலைவர்களிடமும் பேசவுள்ளேன். அனைத்து எதிரணி கட்சிகளும் தங்கள் செயற்பாடுகளை கூட்டிணைக்க வேண்டும் என விரும்புகிறேன்.

  • 332
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads