Category:
Created:
Updated:
ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகக் கோரியும் நாடாளாவிய ரீதியில் 1000 இற்கும் மேற்பட்ட தொழிற் சங்கங்கள் இணைந்து இன்று (28.04.22) முன்னெடுத்துள்ள தொழிற்சங்க போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் வவுனியாவில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டன.
வவுனியா நகரப் பகுதியில் அமைந்துள்ள பலசரக்கு விற்பனை நிலையங்கள் , நகையகங்கள், புடவையகங்கள், மொத்த மரக்கறி விற்பனை நிலையங்கள், அங்காடி வியாபார நிலையங்கள் , அரச திணைக்களங்கள் என்பன முழுமையாக பூட்டப்பட்டு அரசாங்கத்திற்கு தமது எதிர்ப்பை பதிவு செய்தனர்.