Ads
எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்
நெடுஞ்சாலைகள் அமைச்சர் கனக ஹேரத், எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து அமைச்சின் கீழ் உள்ள திணைக்களத் தலைவர்களுடன் கூட்டுக் கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளார்.
இன்று (27) நெடுஞ்சாலைகள் அமைச்சு, வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் அது தொடர்பான சேவைப் பிரிவுகளின் தலைவர்களுடனான சந்திப்பு புதிய நெடுஞ்சாலைகள் அமைச்சர் கனக ஹேரத் தலைமையில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணியாளர்கள் மற்றும் அவர்களின் செயற்பாடுகள், நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள நிறைவேற்று மற்றும் பிரதம பொறியியல் அலுவலகங்கள் மற்றும் திட்டப் பணிகள் தொடர்பாக உரிய அதிகாரிகளுடன் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டது.
Info
Ads
Latest News
Ads