Ads
இரணைமடு குளத்தின் மேலும் இரு வான்கதவுகள் இன்று திறப்பு
கிளிநோச்சி பிரதேசத்தில் தொடரும் மழையால் நீர்மட்டம் அதிகரித்துவரும் நிலையில் இரணைமடு குளத்தின் வான்கதவுகள் இரண்டு இன்று திறக்கப்பட்டுள்ளன.
வடக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக இரணைமடு குளத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாகவே குளத்தின் இரண்டு வான் கதவுகள் இன்று காலை 8.00 மணிக்கு 6 அங்குலங்கள் அளவில் திறக்கப்பட்டுள்ளன.
மேலும் நீர்ப்பிடிப்பு பகுதியில் நீரின் அளவு மழைவீழ்ச்சியின் அடிப்படையில் மேலும் அதிகரிக்கலாம்.
எனவே அனைவரும் விழிப்புடனும் அவதானமாகவும் இருக்குமாறு கிளிநொச்சி அனர்த்த முகாமைத்துவப்பிரிவு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நேற்று முன்தினமும் இரணைமடு குளத்தின் இரு வான்கதவுகள் திறக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Attachments
Info
Ads
Latest News
Ads