
வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்
இராஜங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்னால் இடம்பெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்த மகாலிங்கம் பாலசுந்தரத்தின் 36 வது பிறந்த தினத்தையிட்டு அவருக்கு நீதிவேண்டி அமைச்சரின் வீட்டுக்கு முன்னால் இன்று (25) ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த வருடம் யூன் 21 ம் திகதி அமைச்சரின் வீட்டுக்கு முன்னால் பொதுமக்ன் ஒருவர் மீது அமைச்சரின் மெய்பாது துப்பாக்கி சூடு நடாத்தியதில் மாகாலிங்கம் பாலசுந்தரம் உயிரிழந்ததுடன் மெய்பாதுகாவலர் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட மாகாலிங்கம் பாலசுந்தரத்தின் 36 வது பிறந்த தினமான இன்று படுகொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் அவரின் ஏற்பாட்டில் நினைவேந்த அமைச்சரின் வீட்டுக்கு முன்னாள் உள்ள கொழும்பு மட்டக்களப்பு பிரதான வீதியில் மட்டக்களப்பு வரவேற்கு கோபுரத்துக்கு முன்னால் இடம்பெற்றது
இதில் உயிரிழந்தவரின் உறவினர்கள், பெர்துமக்கள்கள் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், மட்டு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவான், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், முன்னால் அரசாங்க அதிபர் மா.உதயகுமார், கிழக்கு மாகாண பிரதி தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, மற்றம் மாநகரசபை உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு உயிரிழந்தவரின் திரு உருவப்படத்திற்கு மலர்தூவி சுடர் ஏற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.
இதனை தொடர்ந்து அவரின் ஆத்மசாந்தி வேண்டி வீதிகளில் பிரயாணித்தவர்களுக்கு தாகசாந்தி வழங்கிவைத்த பின்னர் அவரின் படுகொலைக்கு நீதி வேண்டி கோஷம் எழுப்பியவாறு ஆர்பாட்டத்தில் சுமார் ஒருமணித்தியாலம் ஈடுபட்டு பின்னர் ஆர்ப்பாட்டகாரர்கள் அங்கிருந்து விலகிச் சென்றனர்