மாணவிக்கு ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞர் கைது
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ஓதலவாடி ஊராட்சிக்கபட்ட சூசைநகர் பகுதியில் இயங்கி வரும் அரசு நிதி உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 11ம் வகுப்பு பயின்று வரும் மாணவியை அதே கிராமத்தை சேர்ந்த கெல்வின்(23) இவர் பாண்டிச்சேரியில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றார்.
கெல்வின் என்பவர் 11ம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசை வார்த்தை கூறி தனிமையில் அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. மேலும் ஓதலவாடி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு அளித்துள்ளனர். புகாரின் பேரில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட குழந்தைகள் நல காப்பகம் துறைறை சேர்ந்த அதிகாரிகள் நேரில் சென்று பள்ளி மாணவியிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில் விசாரணையில் ஊர்ஜிதம் ஆனதால் உடனடியாக கெல்வின் மீது குழந்தை நல காப்பாக மாவட்ட அலுவலர் போளுர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும் போளூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் கெல்வின் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.