400 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டிய இந்திய ஏற்றுமதி - மோடி பெருமிதம்
ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் அகில இந்திய வானொலி மூலம் மான்கி பாத் நிகழ்ச்சி வழியே நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். இந்நிலையில் மார்ச் மாதத்தின் கடைசி ஞாயிற்று கிழமையான இன்று மான்கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியர்களின் திறன் உலகின் அனைத்து இடங்களையும் சென்றடைந்துள்ளது. பொருளாதார முன்னேற்றத்தை நோக்கி இந்தியா வேகமாக பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்தியர்கள் பலர் கடுமையாக உழைத்து வருகின்றனர். 400 பில்லியன் அமெரிக்க டாலர்களை தாண்டிய இந்திய ஏற்றுமதியில் நம்மை பெருமைப்பட வைத்துள்ளது.
ஆந்திரா பங்கனபள்ளி மாம்பழம், நாகாலாந்தின் ராஜா மிளகாய் லண்டனுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. உத்தரப்பிரதேசம். இமாச்சல பிரதேசத்தில் விளைவிக்கப்படும் தானியங்கள் உலகெங்கிலும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த சூழலில் விவசாயிகள் ,இளைஞர்கள் ,சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் நிறுவனங்களை நான் பாராட்டுகிறேன். ஆயுஷ் துறையில் பல ஸ்டார்ட் அப்கள் மற்றும் நிறுவனங்களின் எழுச்சி மற்றும் வெற்றியாகும். பெரிய நிறுவனங்கள் மட்டுமே அரசாங்கத்துக்கு பொருட்களை விற்க முடியும் என்பதை ஆன்லைன் மார்க்கெட் இணையதளம் தற்போது மாற்றியுள்ளது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், " டாக்டர் அம்பேத்கருடன் தொடர்புடைய பஞ்சதீர்த தங்களுக்கு சென்றதை நான் பெருமையாக உணர்கிறேன். எழுச்சியூட்டும் இடங்களை பார்வையிடுமாறு உங்களை நானும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன். பெண் குழந்தைகளின் கல்வியை மேலும் மேம்படுத்தி பெண்களின் அதிகாரத்தை நாம் வலுப்படுத்த வேண்டும்" என்று கூறினார்.