
தர்மபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பல பகுதிகளில் கடந்த 19ஆம் திகதி தொடக்கம் 21 திகதி வரையான காலப்பகுதியில் இவ்வாறு பல கைதுகள்
கடந்த 19ம் திகதி 15 லீற்றர் சட்டவிரோத கசிப்பினை மோட்டார் சைக்கிளின் மூலம் வேறொரு பகுதிக்கு கொண்டு சென்ற சமயம் இரண்டு சந்தேக நபர்களுடன், அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் தர்மபுரம் போலீசார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுஅன்றைய தினமே சுண்டிக்குளம் கடல்கரை பகுதியில் ஒருவரின் சங்கிலியை அறுத்து தப்பிச் செல்ல முற்பட்ட வேளை போலீசாரால் அகப்பட்ட நிலையில் அவர் சங்கிலியை வாயால் விழுங்கிய நிலையில் அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவரிடமிருந்து சங்கிலியை போலீசார் மீட்டுள்ளனர்.கடந்த 20ம் திகதி இண்டாயிரத்தி ஐநூறு மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளை உடைமையில் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இதேவேளை சில தினங்களுக்கு முன்பு காட்டுப் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று திருடப்பட்டு காட்டுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 21ம் திகதியன்று சந்தேக நபரிடமிருந்து ஒரு மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.அன்றைய தினமே கல்லாற்று பாடசாலைக்குச் சோந்தமான நீர் இறைக்கும் பம்பி திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரிடம் இருந்து 3 மூன்று தண்ணீர் பம்ப்பிகளையும் போலீசார் மீட்டுள்ளனர்.