
கிளிநொச்சி மாவட்டத்தில் முகாமைத்துவப் போட்டியில் வெற்றி பெற்ற கிராம அலுவலர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு
மக்களுக்கும் கிராம அலுவலர்களுக்குமான புரிந்துணர்வை வளர்த்துக் கொள்ளவும் மக்களிடையே நல்லுறவை பேனி சிறந்த சேவையை வழங்குபவர்களாக கிராம அலுவலர்கள் செயற்பட வேண்டும் என்று மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் அவர்கள் தெரிவித்துள்ளார்கிளிநொச்சி மாவட்டத்தில் முகாமைத்துவப் போட்டியில் வெற்றி பெற்ற கிராம அலுவலர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு இன்று22-03-2022)பிற்பகல் நடைபெற்றது இந்த நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்அதாவது மக்களுக்கும் கிராம அலுவலர்களுக்குமான புரிந்துணர்வை வளர்த்துக் கொள்ளவும் மக்களிடையே நல்லுறவை பேணி அவர்களுக்கான சிறந்த சேவையினை வழங்குவதோடு ஒரு நல்ல அபிப்பிராயத்தையும் தோற்றுவிப்பதாக கிராம அலுவலர்கள் செயற்பட வேண்டும்கிராம அலுவலர்கள் அதிகாரிகள் மக்களுடனான நல்லுறவை பேணிக்கொள்வது மிக அவசியமாகும் கிராம அலுவலர் அலுவலகங்களானது மக்களுக்கான சிறந்த சேவையை வழங்கும் மையங்களாக அமைய வேண்டும்அதாவது பொது நிர்வாக சேவைகளை மக்களுக்கு கொண்டு செல்லும் ஊடகமாக கிராம அலுலர்களே உள்ளனர்.அரசாங்கத்தின் எந்த கொள்கையாக இருந்தாலும் சரி அதை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் கிராம அலுவலர்கள் பொறுப்பு வாய்ந்தவர்களாக காணப்படுகின்றனர்.என்றும் அவர் மேலும் அதரிவித்துள்ளார்கிளிநொச்சி மாவட்டத்தில் அரச முகாமைத்துவ போட்டிகளில் வெற்றியீட்டிய கிராம அலுவலர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வு இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் மாவட்ட தொழிற் பயிற்சி நிலைய மண்டபத்தில் நடைபெற்றது இதில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மாவட்டத்தின் முதல் நிலை பெற்ற கிராம அலுவலர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி மதிப்பளிக்கட்டனர்.குறித்த நிகழ்வில் கரைச்சி கண்டாவளை பச்சிலைப்பள்ளி பூநகரி ஆகிய நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் திறமையாகச் செயற்பட்ட கிராம அலுவலர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்பட்டன நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஸ்ரீ மோகன் மாவட்ட மேலதிக அரச அதிபர் (காணி) திருலிங்கநாதன் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு பணிப்பாளர் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் மாவட்ட உதவித் திட்டமிடல் பணிப்பாளர் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பிரதேச செயலர்கள் உதவி பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கிராம அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.