சினிமா செய்திகள்
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
‘குட் பேட் அக்லி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனாலும் ஊடகம் மற
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்
கலைவாணர் ஏழை, பணக்காரன், ஜாதின்னு எந்த வேறுபாடும் பாராத மனித நேய மாண்பாளராக விளங்கினார். சென்னை பாண்டி பஜாரில் ஒரு பெரிய ஹோட்டல் ஒன்று இருந்தது. அதில்
மும்பையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் 30 ஆண்டுகளுக்கு மேலாக தன்னுடைய இசையால் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்துள்ளார். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம்,
நடிகை பெருமாயி காலமானார்
சிவகார்த்திகேயன், விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் மூதாட்டி வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை பெருமாயி இன்று காலமானார். மதுரை மாவட்டம் உசிலம்ப
வாட்ச்மேன் வேலை செய்யும் நடிகர்
சினிமாவில் சாதிக்க வேண்டும் என நினைத்து, நடிக்க வரும் அனைவருக்கும் அவர்கள் எண்ணியது போல் வாய்ப்புகளும், வாழ்க்கையும் அமைந்து விடுவதில்லை. அதே போல் அடி
பட விழாவில் கங்குவா தோல்வி குறித்து மறைமுகமாகப் பேசிய சூர்யா
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், சுஜித் சங்கர், தமி
Ads
 ·   ·  849 news
  • R

    3 members
  • 3 friends

கலாச்சாரம் மேம்பட்ட இனமாக இருந்த நிலையில் யுத்தம், இடப்பெயர்வு எங்களை முழுமையாக மாற்றியமைத்து விட்டது

நாங்கள், கலாச்சாரம் மேம்பட்ட இனமாக இருந்த நிலையில் யுத்தம்,  இடப்பெயர்வு எங்களை முழுமையாக மாற்றியமைத்துவிட்ட நிலையில் நாங்கள் மீண்டும் கட்டியமைத்துக்கொண்டிருக்கின்றோம் என கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.சிறிமோகன் தெரிவித்தள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற மகளிர் தின நிகழ்வொன்றில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,தமிழ் மொழியில் இங்கிதம் என்று சிறந்த சொல் உண்டு. இந்த சொல்லை பெரும்பாலும் பயன்படுத்துவது குறைவு. சபை அறிந்து நடந்துகொள்வதைதான் இங்கிதம் என்று சொல்வர். நாங்கள் பார்க்கும் திரைப்படங்கள், நாடகங்கள் அல்லது சமூக வலைத்தளங்களில் வெளியாகும் விடயங்களை நாங்கள் பார்க்க முடியாது உள்ளது. ஆனால் அதனை நாங்கள் தவிர்க்கின்றோமா எனில் இல்லை என்றே சொல்ல முடியும்.இன்று உரிமையை பற்றி கேட்கும் நாங்கள் எமது பொறுப்புக்களையும் நிலைநிறுத்தியே கேட்க வேண்டும். உதாரணமாக ஒரு உத்தியோகத்தர் தனக்கு விடுமுறை வேண்டும் என கோருவார். ஆனால் மறுநாள் செய்து முடிக்க வேண்டிய வேலை தொடர்பில் கவனம் செலுத்துவது மிகவும் குறைவு.நாங்கள் எப்பொழுதும் எமது உரிமைகள் பற்றி மாத்திரமே சிந்திக்கின்றோமேயன்றி பொறுப்புக்கள் தொடர்பில் கவனம் செலுத்துவது இல்லை. இந்த நிலைமை வீட்டிலும், நாட்டிலும், சமூகத்திலும் இருக்கும்.நாங்கள் கூட்டு குடும்பமாக வாழ்ந்தோம். கூட்டுக்குடும்பமாக வாழாவிட்டாலும் உறமுறைகளை கொண்ட தள்ளி வாழும் வாழ்க்கை முறையை கொண்டிருந்தோம். இவ்வாறான இடங்களில் உரிமைகள் மீறப்பட்டது குறைவாகவே உள்ளது. சில இடங்களில் ஒருவருக்கு கூடுதலாகவும், மற்றவருக்கு குறைவாகவும் காணப்படுகின்ற நிலைமையும் உள்ளது.சீதனம், மாமியார் மருமகள் பிரச்சினைகளை பார்க்கின்றபொழுது பெண்களிற்கான உரிமைகள் பெண்களாலேயே மீறப்படுகின்ற நிலைமைகளும் காணப்படுகின்றது.போர் முடிந்து 12 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், அதிலிருந்து மீள்வதற்கு 30 ஆண்டுகள் காலப்பகுதி தேவைப்படும் என்ற நிலை இருக்கின்றது. நாங்கள், கலாச்சாரம் மேம்பட்ட இனமாக இருந்தோம். இடப்பெயர்வு எங்களை முழுமையாக மாற்றியமைத்துவிட்டது. யுத்தம் எங்களை முழுமையாக பாதித்துவிட்டது. இப்பொழுது நாங்கள் மீண்டும் கட்டியமைத்துக்கொண்டிருக்கின்றோம்.எங்களிற்கு முழுமையாக வீடுகள் புனரமைக்கப்படவில்லை. அடுத்த சந்ததி ஒன்று உருவாகும்பொழுதுதான் இவற்றை முழுமையாக்கலாம். அதனால்தான் இங்கு இளவயது திருமணங்கள், தற்கொலைகள், நுண்கடன் பாதிப்புக்களெல்லாம் கூடுதலாக இருக்கின்றது. ஆனால் அதிகாரிகள் என்ற வகையில் இவற்றை மாற்றியமைக்க வேண்டிய கடமை எங்களிற்கு இருக்கின்றது.பெண் மாற்றுத்திறனாளிகளிற்கான போக்குவரத்து, சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட விடயங்கள் இன்று கதைக்கப்பட்டது. அதில் ஏதாவது இடர்பாடுகள் இருந்தால் மாவட்ட செயலகத்தில் உள்ள மனிதவலு அலுவலகத்துடன் தொடர்புகொண்டால் எந்த நேரத்திலும் உதவுவதற்கு தயாராக இருக்கின்றோம் எனவும் அவர் இதன்புாது தெரிவித்திருந்தார்.

  • 561
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads