
வடக்கில் 20 புதிய சதொச விற்பனை நிலையங்கள் - பந்துல
யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களில் 20 புதிய சதொச விற்பனை நிலையங்களை விரைவில் திறக்க உள்ளதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள வர்த்தக அமைச்சர் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கைத்தொழில் வர்த்தகதுறை சம்பந்தமான கலந்துரையாடலில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வடபகுதியில் உணவு பற்றாக்குறை மற்றும் உணவுத் தட்டுப்பாட்டை நீக்கும் முகமாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் புதிதாக 20 சதொச விற்பனை நிலையங்களை விரைவில் திறக்க உள்ளோம். அவ்வாறு திறப்பதன் மூலம் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை தங்குதடையின்றி பெற்றுக்கொள்ள முடியும் அத்தோடு யாழ்ப்பாணம் மாவட்டம் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள உணவு களஞ்சிய சாலைகளில் அத்தியாவசிய பொருட்களை சேமித்து வைத்து சதொச விற்பனை நிலையங்களுக்கு வழங்குவதன் மூலம் பொது மக்கள் இலகுவாக தமது அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இரண்டாம் உலகப் போரின் பின்னர் அனைத்து நாடுகளில் பொருளாதார தாக்கமானது அனைத்து நாடுகளையும் பாதித்துள்ளது. அத்தோடு எமது உணவு உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் நமது நாட்டில் உணவுத் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த முடியும் என்றார்.