Category:
Created:
Updated:
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் (வயது 80), பித்தப்பை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை அடிவயிற்றில் அவருக்கு வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு மருத்துவனையில் பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் பித்தப்பையில் கற்கள் உருவாகியிருந்தது கண்டறியப்பட்டது.
அறுவை சிகிச்சை மூலம் கற்களை அகற்ற டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக நாளை மறுநாள் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளார். அன்றைய தினமே அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.