Category:
Created:
Updated:
தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 மணிக்கு போராட்டமொன்றை கொழும்பில் நடத்தவுள்ளதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்த விடயத்தைத் தெரிவித்த அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ இதை தெரிவித்தார்.
பொது மக்களின் தற்போதைய பிரச்சினைகளை ஜனாதிபதிக்கு தெரிவிப்பதிலும், அடுத்த மாதத்துக்குள் பிரச்சினைகளைத் தீர்க்குமாறு அரச தலைவருக்கு சவால் விடுப்பதிலுமே இந்த போராட்டம் கவனம் செலுத்தும் என அவர் வலியுறுத்தினார். இலங்கையின் எதிர்காலத்தை திட்டமிடுவதற்கு நிபுணர்கள் குழுவை வரவழைக்குமாறு அவர் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.