
மாவட்டத்தில் நிலவும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக தமது கடற்றொழில் நடவடிக்கைகள் முழுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக பூநகரி பிரதேச கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்
நாட்டில் நிலவுகின்ற எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பெருமளவான தொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இரணைமாதா நகர் பள்ளிக்குடா நாச்சிக்குடா கிராஞ்சி வேரவில் வலைப்பாடு போன்ற பகுதிகளில் கடற் தொழிலாளர்கள் தங்களுக்கான எரிபொருளை பெற்றுக் கொள்வதில் தொடர்ந்தும் நெருக்கடி நிலை காணப்படுவதாக தெரிவித்துள்ளனர்.தமது தொழில் நடவடிக்கைகளுக்காக சென்று வருவதற்கு தேவையான எரிபொருள் இல்லாத நிலையில் தாங்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிகைகளில் காத்திருந்தும் மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருளை மாத்திரமே பெற்றுக் கொள்ளமுடிகின்றது. இது தங்களுடைய தொழில் நடவடிக்கைகளுக்கு போதுமானதாக இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.ஆனாலும் தனியார் வர்த்தக நிலையங்களிலும் போதிய அளவு எரிபொருளை பெற்றுக்கொள்ளக்கூடிய நிலை இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்கடந்த வாரம் குறைந்த அளவு எரிபொருளைக் கொண்டு மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவர்; எரிபொருள் தீர்ந்து விட்டதால் குறித்த படகு நீண்ட நேரத்தின் பின்னர் இரணைதீவு பகுதியில் கரையொதுங்கிய பின்னர் சக தொழிலாளர்களால் காப்பாற்றப்பட்டது.எவ்வாறாயினும் எரிபொருள் நெருக்கடிகளையும் கஸ்ரங்களையும் எதிர்கொண்டு தங்களால் பிடிக்கடும் கடலுணவுகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை எனவும் இவ்வாறு எரிபொருள் இன்மை காரணமாக தாங்கள் தொடர்ந்தும் பெரும் பொருளாதாரீதியாகவும் பாதிக்கப்பட்டிருப்பதாக இப்பிரதேச கடற்றழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.