தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் 84% கொரோனா பாதிப்பு
நாட்டில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சமீப நாட்களாக அதிகரித்து வருகின்றன. புதிய உச்சம் தொடும் வகையில், இன்று 68,020 பேருக்கு பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.
இதுபற்றி மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் 84% தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இவற்றில் மராட்டியம் (40,414) முதல் இடத்தில் உள்ளது. இதனை தொடர்ந்து கர்நாடகா (3,082), பஞ்சாப் (2,870), மத்திய பிரதேசம் (2,276), குஜராத் (2,270), கேரளா (2,216), தமிழகம் (2,194) மற்றும் சத்தீஷ்கார் (2,153) ஆகிய 8 மாநிலங்கள் அடுத்தடுத்து அதிக பாதிப்புகளை கொண்டுள்ளன.
இந்தியாவில் மொத்த சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5 லட்சத்து 21 ஆயிரத்து 808 ஆக உள்ளது. இவை மொத்த பாதிப்புகளில் 4.33% ஆகும்.
நாட்டின் மொத்த பாதிப்புகளில் மராட்டியம், கேரளா, பஞ்சாப், கர்நாடகா மற்றும் சத்தீஷ்கார் ஆகிய 5 மாநிலங்கள் 80.17% பாதிப்புகளை கொண்டுள்ளன. தமிழகம் உள்பட 10 மாநிலங்கள் நாளொன்றுக்கு உறுதி செய்யப்படும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் உயர்வடைந்து வருகிறது என அமைச்சகம் தெரிவித்து உள்ளது.