காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி அமலாக்கத்துறை முன்பு ஆஜர்
பணமோசடி வழக்கு தொடர்பாக பிடிபி தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான மெஹபூபா முப்தி இன்று அமலாக்கத்துறை முன் ஆஜரானார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வழக்கில் விசாரணையை எதிர்கொள்ள முப்தி காலை 11 மணிக்கு ஸ்ரீநகரின் ராஜ்பாக்கில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தை அடைந்தார்.
முன்னதாக கடந்த திங்களன்று டெல்லி அலுவலகத்தில் ஆஜராகுமாறு பிறப்பித்த உத்தரவை மறுத்து, தன்னால் ரத்து செய்யமுடியாத வேலைகள் அன்று இருப்பதாக கூறியிருந்தார். மேலும் டெல்லிக்கு பதிலாக ஸ்ரீநகரில் இந்த வழக்கு விசாரிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியதை ஏற்று அமலாக்கத்துறையின் ஸ்ரீநகர் பிரிவில் இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த வழக்கில் அமலாக்கத்துறை வழங்கிய சம்மனை ரத்து செய்யக் கோரி மெஹபூபா முப்தி, நீதிமன்றத்தை நாடிய பின்னர், மார்ச் 19 அன்று, டெல்லி உயர் நீதிமன்றம் அவருக்கு வழங்கிய சம்மனை நிறுத்த மறுத்துவிட்டது.
இதையடுத்து வழக்கு விசாரணையை ஸ்ரீநகரில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அமலாக்கத்துறைக்கு மெஹபூபா முப்தி கடிதம் எழுதினார். இதை ஏற்றுக்கொண்ட அமலாக்கத்துறை இன்று தனது விசாரணையை மேற்கொண்டுள்ளது.