
இத்தாலி வான்வெளியில் ரஷிய விமானங்கள் பறக்க தடை
உக்ரைன் அதிபர் கோரிக்கையை ஏற்று அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் ராணுவ நிதி உதவி, உணவு, மருந்துகள், டாங்கிகள் மற்றும் ஆயுதங்களை உள்ளிட்டவைகளை வழங்கி வருகிறது. ரஷ்யாவின் மோதல் போக்கை கண்டித்து, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. மேலும் ரஷிய விமானங்கள் தங்கள் நாட்டின் வான்வெளியில் பறக்கக்கூடாது என்று உக்ரைனை சுற்றியுள்ள நாடுகள் ஏற்கனவே தடை விதித்துள்ளது.
இந்த நிலையில், தங்கள் நாட்டு வான்வெளியை ரஷிய விமானங்கள் பயன்படுத்த தடை விதித்து இத்தாலி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே பால்டிக் நாடுகள், போலந்து, செக் குடியரசு, பல்கேரியா, ருமேனியா மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளுக்கு மேலே உள்ள வான்வெளியில் தனியார் ஜெட் விமானங்கள் உட்பட ரஷியாவிற்கு சொந்தமான விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல இங்கிலாந்து வான்வெளியில் பறக்கவும் ரஷிய விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று ரஷியாவுக்கு பல நாடுகள் அடுத்தடுத்து பல்வேறு தடைகளை விதித்து வருகிறது.