
நாட்டின் சவால்களை ராஜபக்சக்களால் வெற்றிகொள்ள முடியும் - ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ
இலங்கையின் முதலாவது பாலமான பாமன்கடை சந்தியில் நிர்மாணிக்கப்படும் பாலத்தின் நிர்மாணப் பணிகள் ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவடையும் என ஆளும் தரப்பு பிரதம கொறடா, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.
கொழும்பு, ஹொரணை 120 வீதியில் நிர்மாணிக்கப்படும் புதிய பாமன்கடை பாலத்தின் நிர்மாணப் பணிகளால் வீடுகளை இழக்கும் குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ள புதிய வீடுகளின் சாவியை ஆளும் தரப்பு பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அண்மையில் கையளித்தார்.
பாமாங்கடையில் புதிய பாலம் கட்டுவதற்காக வீடுகள் அகற்றப்படுகின்றன. வெளியேற்றப்பட்ட வீடுகளுக்குப் பதிலாக நகர அபிவிருத்தி அதிகார சபையினால் கொழும்பு 05, கலிங்க மாவத்தையில் நகர மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் வழங்கப்பட்டன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குப் பின்னர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் பெரும்பாலான வீதிகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. தனியார் துறையின் பெரும்பாலான கட்டிடங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் நிர்மாணிக்கப்பட்டவை, இன்று இன்னும் அதிகமானவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையில் நிர்மாணிக்கப்படுகின்றன. அதனால், தேவை அதிகரித்துள்ளது. இவற்றைக் கண்டு எதிர்க்கட்சிகள் பாராமுகமாக இருப்பது போல் உள்ளது. ஒரு வீதி அமைக்கப்படுவது பார்க்கும்போது, தங்கள் காலத்தில் அதைச் செய்ய முடியவில்லையே என்ற வருத்தம்தான் அவர்களுக்கு இருக்கிறது. பாலம் கட்டப்படுவதைப் பார்க்கும்போது, எங்களால் இதைச் செய்ய முடியவில்லையே என்று வருத்தப்படுகிறார்கள். மகிந்த ராஜபக்சவை அவதூறாகப் பேசி, அன்று ஆட்சியைக் கைப்பற்றினார்கள் மகிந்த ராஜபக்ச உருவாக்கிய சீனாவுக்கு அடுத்தபடியாக இருந்த பொருளாதார வளர்ச்சி விகிதத்தைத் தக்கவைக்க முடியாத ஆட்சியே அன்று இருந்தது . அரசியல் கூட செய்யாத ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எப்படி வந்து இதையெல்லாம் செய்தார் என விசனம் தெரிவிக்கின்றனர். அதில் எங்களுக்கு ஆச்சரியமில்லை என்றும் தெரிவித்தார்.