இலங்கைக்கு இந்தியா வழங்கிய எச்சரிக்கை
இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கான வாக்கெடுப்பின் போது இந்தியா அதில் கலந்து கொள்ளாமையை ஜெனீவா விவகாரத்தில் இலங்கைக்கு இந்தியா வழங்கிய இரகசிய எச்சரிக்கை என்ற நோக்கில் பார்க்க வேண்டுமென அமெரிக்கா சாலிஸ்பரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கீதபொன்கலம் தெரிவித்துள்ளார்.ஜெனீவாவில் இடம்பெற்ற வாக்கெடுப்பின் போது அதில் பங்கேற்காத நாடுகளும் இலங்கைக்கு ஆதரவானவை என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்திருந்தார்.சீனாவிற்கு சர்வதேச ரீதியாக தன்னை பலப்படுத்துகின்ற ஒரு கொள்கை காணப்படுகிறது.குறிப்பாக தென்னாசியாவில் அது கட்டியெழுப்பப்பட வேண்டிய அவசியம்இருக்கிறது. அதன் ஒரு காரணமாக இலங்கையை ஒரு தளமாக சீனா கட்டியெழுப்பிவருகிறது. எனினும் அதனை இந்தியா விரும்பவில்லை. ஆகவே இந்தியா, சீனாவுடன் இலங்கையில் போட்டியிடுகின்ற ஒரு நிலை காணப்படுகிறது.அதன் காரணமாக கடந்த குறுகிய காலத்தில் இடம்பெற்ற விடயங்களில் இலங்கை சீனாவிற்குசார்பான நிலைப்பாட்டை எடுத்தமையின் காரணமாக இலங்கைக்கு ஒரு செய்தியைஅனுப்பும் வகையிலான செயற்பாட்டின் அடிப்படையில் தான் இந்த வாக்களிப்பில்இந்தியா கலந்து கொள்ளாமல் தவிர்த்திருந்தது என குறிப்பிட்டுள்ளார்.