கொசுவர்த்தி சுருளால் நேர்ந்த உயிரிழப்பு
சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்தவர் ஜெகதீஸ். தனியார் உணவு நிறுவனத்தில் டெலிவரி வேலை பார்த்து வந்தார். அவர் தினமும் நேரம் வேலை முடித்து விட்டு வீட்டிற்கு வந்து தூங்கும்போது கொசுக்கடியில் இருந்து தப்பிப்பதற்காக கொசுவத்தி சுருள் ஏற்றி வைத்துவிட்டு தூங்குவது வழக்கமாக இருந்திருக்கிறது.
சம்பவத்தன்றும் அப்படித்தான் கொசுவர்த்திச் சுருள் ஏற்றிவைத்துவிட்டு தூங்கியிருக்கிறார். கொசுவர்த்தி சுருளை தூரத்தில் வைக்காமல் அருகிலேயே வைத்து விட்டு படுத்து இருந்திருக்கிறார். இதனால் சிறிது நேரத்தில் கொசுவர்த்தி சுருளில் இருந்து நெருப்பு அவர் போர்த்தியிருந்த துணியின் மீது பட்டிருக்கிறது.
கொஞ்சம் கொஞ்சமாக தீப்பிடித்து துணி முழுவதுமாக தீ பரவியதால் சேலை எரிந்ததில் ஜெகதீஸ் உடல் முழுவதும் தீக்காயங்கள் ஏற்பட்டு இருக்கிறது. இதில் எரிச்சல், வலி தாங்க முடியாமல் அலறி துடித்திருக்கிறார். அவரது சத்தம் கேட்டு ஓடிவந்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்து தீயில் கருகி கிடந்த மகனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் வாலிபர் ஜெகதீஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.