Category:
Created:
Updated:
கிளிநொச்சி பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிச் சென்ற குற்றச் சாட்டில் கைது செய்யப்பட்டவருக்கு சுமார் இரண்டு இலட்சம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன் மணல் அரசுடமையாக்கப்பட்டுள்ளது.கிளிநொச்சி பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி டிப்பர் வாகனத்தில் மணல் அகழ்ந்து ஏற்றிச் சென்ற ஒருவரையும் டிப்பர் வாகனத்தையும் கைது செய்த போலீசார் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்த போலீசார் குறித்த சந்தேகநபரை இன்றைய தினம் (25-02-2022) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிமன்ற நீதவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தியதையடுத்து குறித்த குற்றச்சாட்டுக்கு சுமார் இரண்டு இலட்சம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன் மணல் அரசுடமையாக்கப்பட்டுள்ளது