Category:
Created:
Updated:
கிளிநொச்சி முகமாலை பகுதியில் இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்து சம்பவம் 24.02.2022 முற்பகல் இடம் பெற்றுள்ளது. கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலை பகுதியில் A9 வீதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரிப்பர் வாகனம் எதிரே வந்த பட்டா வாகனத்துடன் மோதியுள்ளது. விபத்தில் தெய்வாதினமாக எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. சம்பவம் தொடர்பில் பளை பொலிசார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.