Category:
Created:
Updated:
பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் சிறுவர் துஸ்பிரயோகங்களை தடுக்கும் விழிப்புணர்வு யாத்திரை ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
சிவில் உரிமை மன்றம் மற்றும் பெண்கள் வாழ்வுரிமை சங்கம் ஆகியன இணைந்து குறித்த விழிப்புணர்வு யாத்திரையை முன்னெடுத்தன.முறிகண்டியிலிருந்து பரந்தன் சத்திவரை முன்னெடுக்கப்பட்ட குறித்த விழிப்புணர்வு யாத்திரையின்போது துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டதுடன் பேருந்துகள், கடைகள், பொது இடங்களில் ஸ்ரிக்கர்களும், பதாதைகளும் காட்சிப்படுத்தப்பட்டன.