
காடுகள் அழிக்கப்பட்டு கிரவல் மண் அகழ்வு செய்யப்படுகின்ற போதும் தமது பகுதிகளில் எந்தவித அபிவிருத்திகளும் இல்லை என இதனைச் சூழவுள்ள கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு புத்துவெட்டுவான் முதிரைச்சோலைப்பகுதியில் பெருமளவான காடுகள் அழிக்கப்பட்டு கிரவல் மண் அகழ்வு செய்யப்படுகின்ற போதும் தமது பகுதிகளில் எந்தவித அபிவிருத்திகளும் இல்லை என இதனைச் சூழவுள்ள கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
முல்லைத்தீவு புத்துவெட்டுவான் மருதன்குளம் ஐயன்கன்குளம் போன்ற கிராமங்களை அண்மித்துக் காணப்படுகின்ற புத்துவெட்டுவான்; முதிரைச்சோலை பகுதியில் பெருமளவான காடுகள் அழிக்கப்பட்டு கிரவல் மண் அகழ்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.இவ்வாறு கிரவல் அகழ்வுகள் தொடர்ந்தும் இடம்பெறுவதாகவும் இந்த பிரதேசத்தில் 25 தொடக்கம் 30 அடி ஆழத்திற்கு மேல் இவ்வாறு கிரவல் அகழ்வு மேற்கொள்ளப்படுவதனால் பாரிய குழிகள் ஏற்பட்டு நீர்தேங்கிக்காணப்படுகின்றன.
இவ்வாறு பாரிய குழிகள் காணப்படுவதனால் எதிர்காலத்தில் கால்நடைகள் வீழ்ந்து இறக்ககூடிய ஆபத்து நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ள பிரதேச மக்கள். தினமும் தமதுபகுதியில் இருந்து பெருமளவான கிரவல் மண் வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்ற போதும் தமது கிராமத்திற்கான பிரதான போக்குவரத்து வீதிகூட இதுவரை புனரமைக்கப்படாத நிலையில் பத்து வருடங்களாக தமது போக்குவரத்துக்களில் சொல்லனத்துன்பங்களை அனுபவித்து வருவதாகவும் மேற்படி கிராம மக்கள் தெரிவித்;துள்ளனர்.