
இரண்டாவது நாளாக நேற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி கையெழுத்துப் போராட்டம்
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி கிளிநொச்சி மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியினால் முன்னெடுக்கப்பட்டுவரும் கிராமங்கள்தோறும் கையெழுத்துப் போராட்டம் இரண்டாவது நாளாக நேற்றும் (21-02-2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி பல்வேறு பகுதிகளிலும் கையெழுத்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன அந்த வகையிலேயே கிளிநொச்சி மாவட்டத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி கிளிநொச்சி மாவட்டத்தில் கையெழுத்து சேகரிக்கும் நிகழ்வு செயல்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரகின்றன.
இலங்கை தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட கிளையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் மேற்படி போராட்டமானது இரண்டாவது நாளாக இன்றும் கிராமங்கள்தோறும் நடைபெற்று உள்ளது.நேற்றைய தினம் (21-02-2022) பிற்பகல் கிளிநொச்சி மாவட்டத்தின்; ஸ்கந்தபுரம் மணியங் குளம் மற்றும் விநாயகர் குடியிருப்பு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டன.இதில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி தங்களது கையொப்பங்களையிட்டுள்ளனர்.
இதன்போது பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கட்சியின் அமைப்பாளரகள் செயற்பாட்டாளர்கள் ஆதரவாளர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.