
பயங்கர வாத தடைச்சட்டம் என்ற மிகப் பெரிய கொடூரமான சட்டத்துக்குள் நாங்கள் வாழ்கின்றோம்
பயங்கர வாத தடைச்சட்டம் என்ற மிகப் பெரிய கொடூரமான சட்டத்துக்குள் இந்த நாட்டில் நாங்கள் வாழ்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னனியின் கிளிசொச்சி மாவட்டக் கிளையினால் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கோரி கையெழுத்திடும் மக்கள் போராட்டத்தில் கிராம மட்டங்களில் கையெழுத்திடும் ஆரம்ப நிகழ்வு இன்று (20-02-2022) மாலை கிளிநொச்சி யூனியன் குளம் முருகன் ஆலயத்தில் நடைபெற்றுள்ளது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் பயங்கரவாத தடைச்சட்டம் என்பது எங்கள் நாட்டில் எங்களுக்கு முன்னால் தலைவிரித்தாடி எங்கள் குழந்தைகள் எங்களது சகோதரர்கள் உறவுகள் குடும்பத் தலைவர்கள் எல்லோரையும் இந்த சட்டம் கொன்றுள்ளது. இந்த பயங்கரவாத தடைச் சட்டத்தில் இருந்து நாங்கள் விடுபடுவதற்காக 44 வருடங்கள் போராடி இருக்கின்றோம்.
தற்காலிக ஏற்பாடாக தமிழர்களுக்கு எதிராக இந்த பயங்கரவாத தடைச்சட்டம் இலங்கை அரசால் கொண்டு வந்து நிறைவேற்றியது. இது மிகப்பெரிய பயங்கரமான ஒரு சட்டம் எமது மக்களைத் தொடர்ந்தும் பலியெடுக்கின்றது.
எமது இளம் சமூகம் தங்களுடைய இளமையை சிதைத்து சிறைகளில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காணாமல் போயிருக்கிறார்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் இதற்குக் காரணம் இந்த பயங்கரவாத தடைச்சட்டம் இந்த சட்டத்தை நீக்குவதற்கு கையெழுத்து பெறும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம் என்று குறிப்பிட்டுள்ளார்.இதில் பச்சிலைப் பள்ளி தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் யூனியன் குளம் கோணாவில் பிரதேசத்தின் வட்டார அமைப்பாளர் பிரபா கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.